உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடும்ப பிரச்னையில் ஆசிரியை தற்கொலை

குடும்ப பிரச்னையில் ஆசிரியை தற்கொலை

புதுச்சேரி: குடும்ப பிரச்னையில் தனியார் பள்ளி ஆசிரியை துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குண்டுபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலாயுதம் மனைவி சுமதி, 50; தனியார் பள்ளியில் ஆசிரியர். இவரது கணவர் மது குடிப்பதை சுமதி தட்டி கேட்டார். இதனால் கணவன் மனைவி இடையே பிரச்னை இருந்தது. இவர்களது மகன் சென்னை ஐ.டி., கம்பெனியில் வேலை செய்து வருகிறார். புதுச்சேரிக்கு வந்த அவரை நேற்று முன்தினம் பஸ் ஏற்றிவிட்டு வேலாயுதம் வீட்டிற்கு வந்து துாங்கினார். இரவு 10:00 மணியளவில் அவரது மனைவி வீட்டில் மின்விசிறியில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, டி.நகர்., போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி