உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா

 அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா

புதுச்சேரி: நெல்லித்தோப்பு, பெரியார் நகர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் பிரேமலதா ஷர்மிளா கிரேசி, சகாய தீபக்குமாரி, ஜெயசுதா, புஷ்பவல்லி, சத்தியகலா, எலிசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜமாலுதீன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர். முன்னதாக பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மலர்துாவி வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்