உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தடுப்பணை சீரமைப்பின் போது பொக்லைன் சிக்கியதால் பரபரப்பு

தடுப்பணை சீரமைப்பின் போது பொக்லைன் சிக்கியதால் பரபரப்பு

பாகூர் : பாகூர் அடுத்த கொம்மந்தான்மேடு தென்பெண்ணையாற்றின் குறுக்கே, கடந்த 2011ம் ஆண்டு தரைப்பாலத்துடன் கூடிய தடுப்பணை கட்டப்பட்டது. முறையான திட்டமிடலின்றி கட்டுமானம் அரைகுறையாக நடந்ததால், தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போதெல்லாம், அணைக்கட்டு உடைவதும், தரை பாலத்தின் இணைப்பு சாலை மற்றும் கரைபகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு அடித்து செல்வதும் வழக்கமாக உள்ளது.கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மீண்டும் தடுப்பணை உடைப்பு ஏற்பட்டு, மண் அரிப்பு காரணமாக 100 மீட்டர் நீளத்திற்கு தண்ணீர் உள்ளே சென்று கரையில் அரிப்பு ஏற்பட்டது. தற்போது புதுச்சேரி பொதுப்பணித்துறை சார்பில், 10 கோடியே 83 லட்ச ரூபாய் செலவில் வெள்ள தடுப்பு சுவர் மற்றும் அணைக்கட்டு சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக, அப்பகுதி மக்கள் கடலுார் சென்று வரும் வகையில், படுகை அணையின் மேற்கு பகுதியில் ஆற்றின் குறுக்கே, தற்காலிகமாக மண் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று காலை பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் வாகனம் திடீரென மண்ணில் சிக்கி கொண்டது. டிரைவர் அதனை வெளியே எடுக்க முயன்றார். இதில் பொக்லைன் ஆற்றில் கவிழும் நிலை ஏற்பட்டது. உடனே, அங்கு வெள்ளப் தடுப்பு சுவர் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் உதவியுடன், பொக்லைன் வாகனத்தை மீட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ