மேலும் செய்திகள்
அரசு தேர்வில் வெற்றி பெற மாணவர்களுக்கு வாழ்த்து
9 hour(s) ago
தேசிய விருது பெற்றவருக்கு பாராட்டு விழா
9 hour(s) ago
புதுச்சேரி இந்து முன்னணி தீபம் ஏற்றும் போராட்டம்
9 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில், ஆட்டோ தொழிற்சங்கத்தினர் தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி புதிய பஸ் நிலையம் புனரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் பஸ் நிலையத்தை தற்காலிகமாக, ஏ.எப்.டி., மைதானத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தற்காலிக சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அங்கு, 22ம் தேதி முதல், தற்காலிக பஸ் நிலையம் செயல்பாட்டிற்கு வரும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஆட்டோ தொழிற்சங்கத்தினர் தற்காலிக பஸ் நிலையத்தில், தங்களுக்கு போதிய இடம் ஒதுக்கித் தரப்படவில்லை என, புகார் தெரிவித்தனர். மேலும், நேற்று காலை 50க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.அங்கு வந்த நகராட்சி ஆணையர் கந்தசாமி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார், ஆட்டோ தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். தற்காலிக பஸ் நிலையத்தில், 'போதிய இடம் ஒதுக்கீடு செய்யப்படும். அங்கு, 30 ஆட்டோக்கள் நிறுத்துவதற்கு ஒரு இடமும், 20 ஆட்டோக்கள் நிறுத்தவதற்கு தனி இடமும், ஒதுக்கீடு செய்யப்படும்' என, தெரிவித்தனர். இதையேற்று, ஆட்டோ தொழிற்சங்கத்தினர், போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago