உள்ளூர் செய்திகள்

சிறுவன் மாயம் 

புதுச்சேரி: விழுப்புரம் மகாராஜபுரம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் பிரிதிவிராஜ், 14; மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ., சாலையில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்து வந்தார். பிரிதிவிராஜ், கடந்த 25ம் தேதி பாட்டி வீட்டில் இருந்து வெளியேறினார். மீண்டும் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து சிறுவனை தேடி வருகின்றனர்.சிறுவன் குறித்த தகவல் தெரிந்தால், 0413-2271030 என்ற எண்ணில் தெரிவிக்க போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ