மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
4 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
4 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
5 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
5 hour(s) ago
காரைக்கால்: கலெக்டராக வேண்டும் என்ற மாணவியின் ஆசையை ஊக்கப்படுத்தும் விதமாக அரவது இருக்கையில் மாணவியை அமரவைத்த கலெக்டர் குலோத்துங்கனை அனைவரும் பாராட்டினர். காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொண்டு வருகின்றார். பொதுமக்கள் பிரச்னைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்த கலெக்டரிடம் செயல்பாடு அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் குலோத்துங்கன் புதுச்சேரி கலெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.இதனால் அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் அவரை நேரில் சந்திந்து வாழ்த்து தெரிவித்தனர்.நேற்று முன்தினம் கலெக்டர் குலோத்துங்கனை நேரில் சந்திந்த நிர்மலா ராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி பிரதிபாவின்சென்ட் நேரில் சென்று தான் எழுதிய பாராட்டு கவிதையை கலெக்டரிடம் வழங்கினார். அப்போது கலெக்டர் உனது ஆசை என்னவென்று கேட்டுள்ளார். அதற்கு நான் கலெக்டராக வேண்டும் என்று மாணவி கூறினார். இதனைத் தொடர்ந்து கலெக்டர் குலோத்துங்கன் , மாணவியை ஊக்கப்படுத்தும் விதமாக அவரை தனது இருக்கையில் அமரவைத்தார். பின் மாணவர்கள் தங்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில்கொண்டு நன்கு படித்து வாழ்க்கையில் முன்னோறி, குடும்பத்திற்கும், நாட்டிற்கு நல் பெயர் வாங்கித்தரவேண்டும் என அறிவுரை வழங்கினார்.
4 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago