உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குபேர் பஜார் கடை ஒதுக்குவதில் சிக்கல் ஆன்லைன் ஏலம் விட நகராட்சி முடிவு

குபேர் பஜார் கடை ஒதுக்குவதில் சிக்கல் ஆன்லைன் ஏலம் விட நகராட்சி முடிவு

புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் உள்ள அண்ணா திடல், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 9.60 கோடி மதிப்பில் மினி ஸ்டேடியமாக கட்டும் பணி கடந்த 2021ம் ஆண்டு துவங்கியது. மைதானத்தை சுற்றி அண்ணா சாலை, குபேர் பஜாரில் 80 கடைகள், லெப்போர்த் வீதியில் 20, சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் 79 கடைகள் இடித்து அகற்றி புதிய கடைகள் கட்டும் பணி நடந்து வருகிறது.இதில், லெப்போர்த் வீதி கடைகளும், சின்ன சுப்ராயப்பிள்ளை கடைகள் ஏற்கனவே அங்கு கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள அண்ணா சாலை குபேர் பஜாரில் உள்ள 80 கடைகளுக்கு மட்டும் கடைகள் ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.புதுச்சேரி நகராட்சியோ நீங்களே கடைகளை தேர்வு செய்து கொண்டு வந்தால் ஏற்று கொள்கிறோம் மறுத்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து கொடுக்கிறோம் என, கூறிவிட்டது. ஆனால், இரு குழுவாக உள்ள வியாபாரிகள் ஆளாக்கு ஒரு எம்.எல்.ஏ., ஆதரவுடன் தங்களுக்கு விரும்பிய கடை தான் வேண்டும் என அடம்பிடித்து வருகின்றனர்.இதனால் அண்ணா சாலை குபேர் பஜாரில் உள்ள கடைகளை மட்டும் ஆன்லைனில் புதிய வியாபாரிகளுக்கு இ-ஆக் ஷன் மூலம் ஏலம் விடலாம் என நகராட்சி ஆலோசித்து வருகிறது. ஏலம் விட்டால் புதுச்சேரி நகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பதால், தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை