உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தனியார் மருத்துவ கல்லுாரி மேலாளர் மாடியில் இருந்து தவறி விழுந்து பலி

தனியார் மருத்துவ கல்லுாரி மேலாளர் மாடியில் இருந்து தவறி விழுந்து பலி

புதுச்சேரி : தனியார் மருத்துவ கல்லுாரி மேலாளர், 3வது மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.லாஸ்பேட்டை இ.சி.ஆர். லதா ஸ்டீல் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுகுந்தன், 56; கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சீனியர் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அனுராதா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.நேற்று முன்தினம் தம்பதிக்கு திருமண நாள். நேற்று முன்தினம் பணி முடித்து வீடு திரும்பிய பாலமுகுந்தன், கோவிலுக்கு செல்ல வேண்டும் என, மனைவி அனுராதாவிடம் கூறிவிட்டு தான் வசிக்கும் 3வது மாடியில் விளக்குகளை ஏற்றினார்.அனுராதா வீட்டிற்குள் தயாராகி கொண்டிருந்தார். 3வது மாடி பால்கனியில் நின்று மெழுகு வர்த்தி ஏற்றி வைத்ததுடன், நாற்காலி மீது ஏறி நின்று சிரியல் பல்புகளை மாட்டி கொண்டிருந்தார். அப்போது, பால்கனியில் இருந்து பாலமுகுந்தன் திடீரென தவறி கிழே விழுந்தார்.தரையில் வைக்கப்பட்டு இருந்த பூத்தொட்டியில் விழுந்ததில் தலையின் பின் பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டு காதில் ரத்தம் வந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பாலமுகுந்தனை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மருக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து வரும் வழியிலே இறந்து விட்டதை உறுதி செய்தனர். இது தொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ