உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவி பிரிந்த வேதனை கணவன் தற்கொலை

மனைவி பிரிந்த வேதனை கணவன் தற்கொலை

காரைக்கால்: காரைக்காலில் மனைவி பிரிந்த வேதனையில் கணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.காரைக்கால், கோட்டுச்சேரி வரிச்சிக்குடி கழுகுமேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 35; கூலித் தொழிலாளி. இவரது மனைவி வினோதா. கார்த்திகேயன் சரியாக வேலைக்கு செல்லுவதில்லை, போதைக்கு அடிமையாகியுள்ளார்.இதனால் கோபித்துக்கொண்டு வினோதா தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அளவுக்கு அதிகமாக மது அருந்திய கார்த்திகேயன் நேற்று முன்தினம் மனவேதனையில் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.இதுக்குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ