உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாய்க்காலில் சிலாப் அமைக்கும் பணி

வாய்க்காலில் சிலாப் அமைக்கும் பணி

அரியாங்குப்பம், : மணவெளி தொகுதி இடையார்பாளையத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பில் கழிவுநீர் வாய்க்காலில் சிமென்ட் சிலாப் அமைக்கும் பணி துவக்கப்பட்டது.தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம், மாரியம்மன் கோயில் வீதி, கிழக்கு மற்றும் மேற்கு பகுதி வடக்கு வீதி ஆகிய பகுதிகளில் ரூ. 5 லட்சம் மதிப்பீல் யு வடிவ கழிவுநீர் வாய்க்கால்கள் மேல் சிமென்ட் சிலாப் அமைக்கும் பணி நேற்று துவக்கப்பட்டது.இந்த பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !