உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் திருப்பாவை சேவை உற்சவம்

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் திருப்பாவை சேவை உற்சவம்

நெட்டப்பாக்கம் : ஆங்கில புத்தாண்டையொட்டி, வடுக்குப்பம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் திருப்பாவை சேவை உற்சவம் நேற்று நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த வடுக்குப்பம் கிராமத்தில் உள்ள பத்மாவதி தாயர் சமேத வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று காலை 5.30 மணிக்கு திருப்பாவை சேவை நடந்தது.அனைத்தொடர்ந்து சன்னதி புறப்பாடும், தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.இதேபோல் சொரப்பூர் கிராமத்தில் உள்ள கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு திருப்பாவை சேவை உற்சவம் நடந்தது.இதில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி