உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டோக்கன் சிஸ்டம் போலீஸ் எச்சரிக்கை

டோக்கன் சிஸ்டம் போலீஸ் எச்சரிக்கை

நெட்டப்பாக்கம்,: லோக்சபா தேர்தலை முன்னிட்டு நெட்டப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் பார் உரிமையாளர்கள்- போலீசார் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை சரியாக கடைப்பிடிக்க வேண்டும். அரசியல் கட்சியினரின் டோக்கன் நடைமுறைகளை பார்களில் அனுமதிக்க கூடாது. இதனையும் மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் எச்சரித்தார்.இக்கூட்டத்தில், நெட்டப்பாக்கம், மடுகரை பகுதியில் உள்ள ஓயின்ஷாப் மற்றும் பார்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !