டிராக்டர் மெக்கானிக் தற்கொலை
புதுச்சேரி: கடன் தொல்லையால் டிராக்டர் மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். வில்லியனுார் அடுத்த ஆரியப்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் விஜி, 37; டிராக்டர் மெக்கானிக். இவர் தொழில் மற்றும் வீட்டு மனை வாங்குவதற்கு பலரிடம் கடன் வாங்கி இருந்தார். கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்ப கேட்கவே, கடனை எப்படி அடைப்பது என தெரியாமல் மனவேதனையில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.