மேலும் செய்திகள்
ஓவியக் கண்காட்சி துவக்கம்
4 minutes ago
வாலிபர் கைது
5 minutes ago
மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை
22 hour(s) ago
தி.மு.க., செயற்குழு கூட்டம்
22 hour(s) ago
புதுச்சேரி: வாடகை பைக் கடைகளில் போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். புதுச்சேரியில் அங்கீகரிக்கப்படாத பைக் வாடகை கடைகள் புற்றீசல் போல அதிகரித்துள்ளது. இந்த கடைகளால் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நடை பாதைகளும், ரோடுகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறைக்கு புகார் சென்றது. அதையடுத்து போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் உத்தரவின்பேரில், புதுச்சேரி போக்குவரத்துத் துறை, போக்குவரத்து காவல்துறை, நகராட்சி அதிகாரிகள் ஒருங்கிணைந்து பைக் வாடகை கடைகளில் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். ஆய்வில் போக்குவரத்து துறை தலைமையக ஆர்.டி.ஓ., பிரபாகர் ராவ், உழவர்க்கரை ஆர்.டி.ஓ., அங்காளன், புதுச்சேரி ஆர்.டி.ஓ., ரமேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், உதவி மோட்டார் வாகன ஆய்வாளர்கள், அமலாக்க உதவியாளர்கள் அடங்கிய சிறப்புக் குழுவும் களமிறங்கின. இந்த திடீர் ஆய்வில் வர்த்தக அனுமதி இல்லாமல் இயங்கிய 24 வாடகை பைக்குகள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகை யில், அங்கீகரிக்கப்படாத பைக் வாடகை கடைகள் பெரும்பாலும் கட்டாய பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு விதிமுறைகளைத் தவிர்த்துவிடுகின்றன. இது ஓட்டுபவர்கள் மற்றும் பொதுமக்களின் சாலைப் பாதுகாப்பிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சுற்றுலா பயணிகளுக்கும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே இந்த ரெய்டு நடத்தப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகளின் உரிமையாளர்கள் அபராதங்களை முதலில் செலுத்த வேண்டும். பின், சம்பந்தப்பட்ட மண்டலப் போக்குவரத்து அலுவலகத்தில் சரியான வர்த்தக ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகே தங்களது வாகனங்களைத் திரும்பப் பெற முடியும். இந்த ரெய்டு தொடரும்' என்றனர்.
4 minutes ago
5 minutes ago
22 hour(s) ago
22 hour(s) ago