உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காட்டேரிக்குப்பம் ஸ்டேஷனில் மரக்கன்று நடும் விழா

காட்டேரிக்குப்பம் ஸ்டேஷனில் மரக்கன்று நடும் விழா

காட்டேரிக்குப்பம் : காட்டேரிக்குப்பம் போலீஸ் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடந்தது.விழாவிற்கு காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமை தாங்கி, போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தை சுற்றிலும் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டார். இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் லுார்துநாதன், ஜானகிராமன், உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, காட்டேரிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் போலீசார் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை