உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எப்.எஸ்.டி.ஏ., பள்ளி மாணவிகளுக்கு த.வெ.க., தலைவர் விஜய் வாழ்த்து

எப்.எஸ்.டி.ஏ., பள்ளி மாணவிகளுக்கு த.வெ.க., தலைவர் விஜய் வாழ்த்து

திருபுவனை : திருபுவனை எப்.எஸ்.டி.ஏ., ஆங்கில மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவிகளுக்கு த.வெ.க., தலைவர் விஜய் ரொக்கப் பரிசு வழங்கி, வாழ்த்தினார்.த.வெ.க., சார்பில் 2024-2025ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக த.வெ.க., தலைவர் விஜய் பரிசு வழங்கி, வாழ்த்தினார்.சென்னையில் நடந்த விழாவில் புதுச்சேரி திருபுவனை எப்.எஸ்.டி.ஏ., மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600க்கு 580 மதிப்பெண்கள் பெற்ற மாணவி மிருதுளா மற்றும் பத்தாம் வகுப்பில், 500க்கு 485 மதிப்பெண்கள் பெற்ற மாணவி மதுவந்தி ஆகியோர் திருபுவனை தொகுதி அளவில் சிறப்பிடம் பெற்றனர். இம்மாணவிகளுக்கு த.வெ.க., தலைவர் விஜய் பொன்னாடை அணிவித்து, தலா ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை