| ADDED : டிச 27, 2025 05:43 AM
புதுச்சேரி: சுனாமி நினைவு தினத்தையொட்டி, வீராம்பட்டினம் கடற்கரையில் சுனாமியால் இறந்தவர்களின் நினைவு சின்னத்தில் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கடந்த 2004ம் ஆண்டு சுனாமி, தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரை கிராமங்களை தாக்கியது. இதில் புதுச்சேரி மாநிலத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். சுனாமி 21ம் ஆண்டு நினைவு தினம் தமிழ்நாடு, புதுச்சேரியில் அனுசரிக்கப்பட்டது. சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு சின்னத்தில் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. எல்.ஜே.கே., தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் நிர்வாகிகள் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.