மேலும் செய்திகள்
போலீஸ் உடல் தகுதி தேர்வு முதல் நாள் 279 பேர் பங்கேற்பு
5 hour(s) ago
லெனின் சிலை நிறுவ அரசுக்கு கோரிக்கை
5 hour(s) ago | 1
போதையில் தகராறு: 2 பேர் கைது
5 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் ஆலோசனைக் கூட்டம், தலைவர் கராத்தே வளவன் தலைமையில் சங்க அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்தில், விளையாட்டு வீரர்கள்நலன் மற்றும் முன்னேற்றம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரி அரசு, விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கு போதுமான நிதியை இதுவரை ஒதுக்காமல் இருப்பதை வன்மையாக கண்டிக்கிறது.70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளாக பணியாற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்களுக்கு கடந்த, 2009ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய உதவித்தொகை, ஊக்கத்தொகை மற்றும் பரிசுத்தொகை ஆகியவற்றை உடனே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெளி மாநில போட்டிகளுக்கு செல்லும் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான ரயில்வே பயண சலுகை கட்டணம் பெற திருச்சி செல்ல வேண்டி உள்ளது. அந்த ரயில்வே சலுகை கட்டண வசதியை புதுச்சேரி மாநிலத்திலேயே பெற்றிட தேவையான நடவடிக்கைகளை கவர்னர் தமிழிசை செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள், நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் ராஜ் , சந்தோஷ், சதீஷ், செந்தில்வேல், செல்வம், பாலச்சந்தர், வெங்கடாஜலபதி, ஆறுமுகம், பிரவீன், அசோக், அன்பு நிலவன், மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
5 hour(s) ago
5 hour(s) ago | 1
5 hour(s) ago