உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வள்ளலார் பள்ளி ஆண்டு விழா

வள்ளலார் பள்ளி ஆண்டு விழா

நெட்டப்பாக்கம் : பண்டசோழநல்லுார் திருவருட்பிரகாச வள்ளலார் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.முதன்மைக் கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் சுவாமிராஜ் தர்மக்கண் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் துணை சபாநாயகர் ராஜவேலு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், கல்வி மற்றும் நற்பண்புகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.ஆசிரியை குணவதி வாழ்த்துரை வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திருநாவுக்கரசு, ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை சத்தியவதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை