கிளை சாராய கடைகளால் கிராம பெண்கள் அச்சம்
புதுச்சேரியில் சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள், அரசின் கலால் துறை மூலம் ஏலம் விடப்பட்டு, அரசு அனுமதியுடன் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே புதுச்சேரி எல்லையில் தமிழக பகுதியையொட்டிய கிராமங்களில் சாராயக் கடைகளை ஏலம் எடுப்பவர்கள், அதிக லாபம் வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு அனுமதியை மீறி குடியிருப்புகள் அருகே கிளைக் கடைகளை அமைத்து சாராயம் விற்பனை செய்து வருகின்றனர்.அங்கு வரும் குடிமகன்களால், பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுவதுடன், அப்பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. ஆகையால், கலால் துறை அதிகாரிகள் கிராமப்புறங்களில் குடியிருப்புகள் பகுதிகளில் அனுமதியின்றி செயல்படும் சாராய கிளைக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.