தனகோடி நகரில் நாளை குடிநீர் கட்
புதுச்சேரி : தனகோடி நகர் மற்றும் தர்மாபுரி மேல்நிலை நீர்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை 20ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. நாளை காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, தனகோடி நகர், தர்மாபுரி, லெனின் வீதி, சபரி நகர், புரட்சி தலைவி நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்தார்.