உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நலத்திட்ட உதவி முறைகேடு விவகாரம்; சி.பி.ஐ., விசாரணைக்கு வலியுறுத்தல்

நலத்திட்ட உதவி முறைகேடு விவகாரம்; சி.பி.ஐ., விசாரணைக்கு வலியுறுத்தல்

புதுச்சேரி; நலத்திட்ட உதவிகள் முறைகேடு விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, புதுச்சேரி அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.அவர், கூறியதாவது: புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, வருவாய்த் துறை, மீனவர் நலத்துறை உள்ளிட்ட நலத்திட்ட உதவிக்கான பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையில் யு.டி.சி.,யாக பணிபுரிந்த நபர் ரூ.65 லட்சத்துக்கு மேல் மக்களுக்கு சேர வேண்டிய பணத்தை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்துள்ளார்.முறைகேட்டை தடுக்க தவறிய அனைத்து அதிகாரிகளும் குற்றவாளிகள் தான் என்பதை அரசு உணராமல், தனி நபர் மீது வழக்கு பதிந்து, முறைகேட்டை மூடி மறைக்கிறது.முறைகேட்டில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் ஜிம் அமைத்துக் கொள்ள மதிப்பீட்டு குழு தலைவர் தி.மு.க.,வை சேர்ந்த நாஜிம் அரசிடம் பரிந்துரை செய்துள்ளார். இன்று ஜிம் அமைத்துக் கொள்பவர்கள், நாளை ஸ்பா அமைக்கவும் கோரிக்கை வைப்பார்' என்றார்.பேட்டியின் போது மாநில இணைச்செயலாளர் திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை