உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்ணிடம் ரூ. 11 லட்சம் மோசடி

பெண்ணிடம் ரூ. 11 லட்சம் மோசடி

புதுச்சேரி : புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் 11 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, குருசுக்குப்பத்தை சேர்ந்தவர் கோதளிராய். இவரது மொபைல் போனை தொடர்பு கொண்ட நபர், தகவல் தொடர்புத்துறை அலுவலக அதிகாரி பேசுவதாக தெரிவித்துள்ளார். அப்போது அவர், கோதளிராயின் ஆதார் மற்றும் மொபைல் எண் ஆகியவை பெண்களுக்கு எதிரான சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க பணம் கேட்டு மிரட்டினார்.இதனை உண்மையென நம்பி அவரும் 11 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில், சைபர் கிரைம் போலீஸ் வழக்குப் பதிந்து, மேசாடி கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை