மேலும் செய்திகள்
சர்வதேச யோகா தினம்; பள்ளிகளில் கொண்டாட்டம்
21-Jun-2025
பாகூர் : தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் 'சர்வதேச யோகா தினவிழா' கொண்டாடப்பட்டது.விழாவிற்கு, பள்ளி தாளாளர் கிரண்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி சேர்மன் எழிலரசி கிரண்குமார் தலைமை தாங்கினார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனங்களின் அவசியம், பயன்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து, புதுக்குப்பம் கடற்கரை மணல் பரப்பில் பள்ளியின் யோகா ஆசிரியர் வழிகாட்டுதலுடன், மாணவர்கள் சூரிய நமஸ்காரம், உள்ளிட்ட பல்வேறு யோகசனங்களை செய்து பயிற்சியில் ஈடுபட்டனர்.முன்னதாக, லாஸ்பேட்டையில் ஈஷா யோகா மையம் சார்பிலும்,புதுச்சேரி சித்தா மண்டல ஆராய்ச்சி நிறுவனத்தில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பிலும் நடந்த யோகா தின விழாவில், பள்ளி மாணவர்கள் பங்கேற்று யோகாசனங்களை செய்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
21-Jun-2025