உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பொங்கல் பயனாளிகள் பட்டியலில் புதிதாக சேர விண்ணப்பிக்கலாம்

 பொங்கல் பயனாளிகள் பட்டியலில் புதிதாக சேர விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி: ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத் துறை இயக்குநர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர் குடும்பங்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்குவதற்கு பதிலாக பண உதவி ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடுவதை முன்னிட்டு, இதுவரை இத்துறையில் பயன்பெறாத பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளனர். எனவே,இதுவரை இத்துறையின் மூலம் பயன் பெறாத 18 வயது பூர்த்தியடைந்தஆதிதிராவிடர் பழங்குடியினர், அவர்களது குடும்ப உறுப்பினர்கள்அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை அடுத்த மாதம் 10ம் தேதிக்குள் பிறந்த பதிவு, ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வங்கி கணக்கு புத்தகம், ஜாதி, வருமான சான்றிதழ் நகல்களுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ