உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக்கில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது: 1 கிலோ பறிமுதல்

பைக்கில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது: 1 கிலோ பறிமுதல்

புதுச்சேரி : லாஸ்பேட்டை பகுதியில் பைக்கில் கஞ்சா கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்து, 1 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். லாஸ்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு நாவலர் சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வேகமாக பைக்கில் வந்த வாலிபர், போலீசாரை கண்டவுடன் தப்பி செல்ல முயன்றார். அவரை விரட்டி பிடித்துபோலீசார், பைக்கை சோதனை செய்தனர். அதில், பெட்ரோல் டேங்க் கவரில் ரூ. 1 லட்சம்மதிப்பிலான 1 கிலோ 175 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், லாஸ்பேட்டை, குறிஞ்சி நகர், பகத் சிங் வீதியை சேர்ந்த சேகர், 31; என்பது தெரியவந்தது. அவர், சென்னையில் இருந்து மொத்தமாக கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து, லாஸ்பேட்டை பகுதியில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிக லாபத்திற்கு விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, சேகரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 1 கிலோ 175 கிராம் கஞ்சா பொட்டலங்கள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சேகர் மீது தன்வந்தரி, லாஸ்பேட்டை, ஆரோவில் உள்ளிட்ட போலீஸ் நிலையங் களில் கஞ்சா விற்பனை வழக்குகள் உள்ளது குறிப் பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை