உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / பாட்மின்டன்: சிந்து, லக்சயா அபாரம்

பாட்மின்டன்: சிந்து, லக்சயா அபாரம்

பாரிஸ்: பாட்மின்டனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் சிந்து, லக்சயா சென் முன்னேறினர்.பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் 'எம்' பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் சிந்து, எஸ்தோனியாவின் கிறிஸ்டின் குபா மோதினர். முதல் செட்டை 21-5 எனக் கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 21-10 என வென்றார். முடிவில் சிந்து 21-5, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். முதல் போட்டியில் மாலத்தீவு வீராங்கனையை வீழ்த்திய சிந்து, 2 புள்ளிகளுடன் 'எம்' பிரிவில் முதலிடம் பிடித்து 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடக்கும் 'ரவுண்டு-16' போட்டியில் சிந்து, சீனாவின் ஹி பிங்ஜியாவோ மோதுகின்றனர்.லக்சயா வெற்றி: ஆண்கள் ஒற்றையர் 'எல்' பிரிவு 2வது போட்டியில் உலகின் 'நம்பர்-22' இந்தியாவின் லக்சயா சென் 22, உலகின் 'நம்பர்-4' இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டி 26, மோதினர். அபாரமாக ஆடிய லக்சயா சென் 21-18, 21-12 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். முதல் போட்டியில் பெல்ஜியம் வீரரை வீழ்த்திய லக்சயா சென், 2 புள்ளிகளுடன் 'எல்' பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார். ஆண்கள் ஒற்றையர் 'கே' பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் பிரனாய் 16-21, 21-11, 21-12 என வெற்றி பெற்றார். முதல் போட்டியில் ஜெர்மனிவ வீரரை வீழ்த்திய பிரனாய், 'கே' பிரிவில் முதலிடம் பிடித்து 'ரவுண்டு-16' போட்டிக்கு முன்னேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி