மேலும் செய்திகள்
பாட்மின்டன்: அசத்துமா இந்தியா
02-Feb-2026
கோப்பை வென்றார் தேவிகா: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்
01-Feb-2026 | 1
பாட்மின்டன்: பைனலில் தேவிகா
31-Jan-2026
தாய்லாந்து பாட்மின்டன்: அரையிறுதியில் தேவிகா
30-Jan-2026
பசல்: சுவிட்சர்லாந்து பாட்மின்டனில் சிந்து, லக்சயா தோல்வியடைந்தனர். சுவிட்சர்லாந்தின் 'சுவிஸ் ஓபன் சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின் மியாசகியை சந்தித்தார். இதன் முதல் செட்டை 21-16 என வென்ற சிந்து, அடுத்த இரு செட்டுகளை கோட்டை விட்டார். முடிவில் சிந்து 21-16, 19-21, 16-21 என தோல்வியடைந்தார்.ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இத்தொடரின் 'நம்பர்-1' வீரர், மலேசியாவின் லீ ஜியாவை சந்தித்தார். இதில் ஸ்ரீகாந்த் 21-16, 21-15 என நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு வீரர் லக்சயா சென், 17-21, 15-21 என தென் கொரியாவின் சியா ஹாவோவிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் பிரியான்ஷு ராவத், 21-14, 21-13 என சீனாவின் லெய் ஜியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் 18-21, 22-20, 21-18 என பிரான்சின் அலெக்சை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார். பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரீஷா, காயத்ரி ஜோடி, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சக இந்தியாவின் பிரியா, ஸ்ருதி ஜோடியை 21-10, 21-12 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
02-Feb-2026
01-Feb-2026 | 1
31-Jan-2026
30-Jan-2026