மேலும் செய்திகள்
உலக பாட்மின்டன்: சாதிக்குமா இந்தியா
05-Oct-2025
மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: ஷ்ரியான்ஷி கலக்கல்
05-Oct-2025
கொரிய பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்
24-Sep-2025
கொரிய பாட்மின்டன்: சாதிப்பாரா பிரனாய்
22-Sep-2025
புதுடில்லி: பாட்மின்டன் தரவரிசையில் சிந்து, லக்சயா சென் பின்னடைவை சந்தித்தனர். சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பு சார்பில் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது. பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்தியாவின் சிந்து, ஒரு இடம் பின்தங்கி, 13வது இடத்தில் உள்ளார். ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற இவர், பாரிஸ் போட்டியில் சாதிக்க, தற்போது ஜெர்மனியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். மற்ற இந்திய வீராங்கனைகள் ஆகர்ஷி (40 வது), மாளவிகா (42), அனுபமா (44), உன்னாதி (52) பின்தங்கியுள்ளனர். லக்சயா ஏமாற்றம்ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்தியாவின் பிரனாய், 13வது இடத்தில் தொடர்கிறார். மற்றொரு இந்திய வீரர் லக்சயா சென், 5 இடம் பின்தங்கி, 'நம்பர்-19' ஆக உள்ளார். பிரியான்ஷூ 35 வது, ஸ்ரீகாந்த் 37 வது இடத்தில் உள்ளனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, 'நம்பர்-3' ஆக தொடர்கிறது. பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் அஷ்வினி-தனிஷா ஜோடி, 19வது, திரீஷா-காயத்ரி ஜோடி 21வது இடத்தில் உள்ளன.
05-Oct-2025
05-Oct-2025
24-Sep-2025
22-Sep-2025