உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / மாளவிகா கலக்கல் வெற்றி: சீன ஓபன் பாட்மின்டனில்

மாளவிகா கலக்கல் வெற்றி: சீன ஓபன் பாட்மின்டனில்

சாங்ஜோ: சீன ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் மாளவிகா வெற்றி பெற்றார்.சீனாவில், 'சூப்பர் 1000' அந்தஸ்து பெற்ற சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத் ('நம்பர்-43'), பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தோனேஷியாவின் கிரிகோரியா மரிஸ்கா துஞ்சங் ('நம்பர்-7') மோதினர். முதல் செட்டை 26-24 என போராடி கைப்பற்றிய மாளவிகா, இரண்டாவது செட்டை 21-19 என வென்றார். மொத்தம் 46 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய மாளவிகா 26-24, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.பெண்கள் ஒற்றையரில் நடந்த மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், இமாத் பரூக்கி சமியா தோல்வியடைந்தனர். ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 21-4, 10-21, 21-23 என ஜப்பானின் கென்டா நிஷிமோடோவிடம் போராடி தோல்வியடைந்தார்.பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரீசா-காயத்ரி கோபிசந்த், ருதபர்னா-ஸ்வேதபர்னா, கலப்பு இரட்டையரில் சுமீத்-சிக்கி ரெட்டி, சதிஷ் குமார்-ஆத்யா ஜோடி தோல்வியை தழுவின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி