மேலும் செய்திகள்
பாட்மின்டன்: அசத்துமா இந்தியா
02-Feb-2026
கோப்பை வென்றார் தேவிகா: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்
01-Feb-2026 | 1
பாட்மின்டன்: பைனலில் தேவிகா
31-Jan-2026
தாய்லாந்து பாட்மின்டன்: அரையிறுதியில் தேவிகா
30-Jan-2026
செங்டு: உபர் கோப்பை பாட்மின்டனில் இந்திய அணி 0-5 என சீனாவிடம் தோல்வியடைந்தது. சீனாவில் 33வது தாமஸ் கோப்பை (ஆண்கள்), 30வது உபர் கோப்பை (பெண்கள்) பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இந்திய பெண்கள் அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றது. முதல் இரு போட்டியில் கனடா, சிங்கப்பூரை வீழ்த்திய இந்திய அணி, காலிறுதிக்கு முன்னேறியது. நேற்று தனது கடைசி லீக் போட்டியில் சீனாவுடன் மோதியது. ஒற்றையர் முதல் போட்டியில் இந்தியாவின் இஷாராணி 12-21, 10-21 என சீனாவின் வெய் செனிடம் தோல்வியடைந்தார். இரட்டையர் முதல் போட்டியில் இந்தியாவின் பிரியா-ஸ்ருதி ஜோடி 13---21, 12-21 என சீனாவின் ஷென் ஷென், பன் ஜியா ஜோடியிடம் தோற்றது. ஒற்றையர் பிரிவு இரண்டாவது போட்டியில் இந்தியாவின் அன்மோல் கார்ப், சீனாவின் யூ ஹான் மோதினர். இதில் அன்மோல் 9-21, 1-4 என பின்தங்கி இருந்த போது காயம் காரணமாக விலக, ஹான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சிம்ரன் சிங், ரித்திகா ஜோடி 9-21, 10-21 என சீனாவின் நிங் டன், ஷெங் ஷு ஜோடியிடம் வீழ்ந்தது. கடைசி, ஒற்றையர் பிரிவு மூன்றாவது போட்டியில் இந்தியாவின் தான்வி, 7-21, 16-21 என ஜி வாங்கிடம் தோல்வியடைந்தார். முடிவில் இந்திய அணி 0-5 என தோல்வியடைந்தது.
02-Feb-2026
01-Feb-2026 | 1
31-Jan-2026
30-Jan-2026