உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஒரு ஓவரில் 43 ரன்: கவுன்டி போட்டியில்

ஒரு ஓவரில் 43 ரன்: கவுன்டி போட்டியில்

பிரைட்டன்: கவுன்டி போட்டியில் இங்கிலாந்தின் ராபின்சன் ஒரு ஓவரில் 43 ரன் வழங்கி ஏமாற்றினார்.இங்கிலாந்தில், 'கவுன்டி சாம்பியன்ஷிப் டிவிசன்-2' தொடர் நடக்கிறது. ஹோவ் நகரில் நடந்த போட்டியில் சசக்ஸ் அணி (442/10, 296/6 'டிக்ளேர்') 18 ரன் வித்தியாசத்தில் லீசெஸ்டர்ஷயர் அணியை (275/10, 445/10) வீழ்த்தியது. இதன் இரண்டாவது இன்னிங்சில், சசக்ஸ் வேகப்பந்துவீச்சாளர் ராபின்சன் வீசிய 59வது ஓவரை லீசெஸ்டர்ஷயர் வீரர் லுாயிஸ் கிம்பர் எதிர்கொண்டார். இதில் 2 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 43 ரன் (6, 4+2, 4, 6, 4, 4+2, 4, 4+2, 1) வழங்கினார். கவுன்டி விதிப்படி ஒரு 'நோ-பால்' வீசினால் 2 ரன் 'எக்ஸ்டிரா' வழங்கப்படும். இவர் 3 'நோ பால்' வீசினார்.இதன்மூலம் முதல் தர கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன் வழங்கிய பவுலர் பட்டியலில் 2வது இடம் பிடித்தார் ராபின்சன். ஏற்கனவே நியூசிலாந்தில் நடந்த ஷெல் டிராபியில் (1990, எதிர்: கேன்டர்பரி) வெலிங்டன் அணியின் பெர்ட் வான்ஸ், ஒரு ஓவரில் 77 ரன் வழங்கி இருந்தார். தவிர, ஒரு இன்னிங்சில் அதிக ரன் வழங்கிய இங்கிலாந்து பவுலரானார் ராபின்சன். இதற்கு முன் 1998ல் லங்காஷயர் அணிக்கு எதிரான போட்டியில் சர்ரே அணியின் வேகப்பந்துவீச்சாளர் அலெக்ஸ் டியூடர் 38 ரன் வழங்கி இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ