உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / வில்வித்தை: ஷீத்தல் தேவி வெள்ளி

வில்வித்தை: ஷீத்தல் தேவி வெள்ளி

புதுடில்லி: 'கேலோ இந்தியா' தேசிய ரேங்கிங் வில்வித்தை போட்டியில் இந்திய மாற்றுத்திறனாளி வீராங்கனை ஷீத்தல் தேவி வெள்ளி வென்றார்.டில்லியில் 'கேலோ இந்தியா' தேசிய ரேங்கிங் வில்வித்தை தொடர் நடந்தது. இதன் தனிநபர் 'காம்பவுண்டு' பைனலில் ஜம்மு-காஷ்மீரின் ஷீத்தல் தேவி 17, ஹரியானாவின் எக்தா ராணி மோதினர்.ஆசிய பாரா விளையாட்டில் தங்கம் வென்ற ஷீத்தல் தேவி 138-140 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இவருக்கு பதக்கத்துடன் ரூ. 40,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. தங்கம் வென்ற ஏக்தா ராணிக்கு ரூ. 50,000 பரிசுத் தொகை கிடைத்தது.ஷீத்தல் தேவி கூறுகையில், ''இத்தொடரில் கிடைத்த அனுபவம் பாராலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்பட உதவும்,'' என்றார்.ஏக்தா ராணி கூறுகையில், ''ஷீத்தல் தேவிக்கு எதிராக விளையாடியது நல்ல அனுபவம். இரு கைகள் இல்லாத இவர், மற்ற விளையாட்டு நட்சத்திரங்களுக்கு ஊக்கம் அளிக்கிறார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை