உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / வங்கதேசம் வலுவான முன்னிலை: ஹசன் ஜாய், ஷாத்மத் அரைசதம்

வங்கதேசம் வலுவான முன்னிலை: ஹசன் ஜாய், ஷாத்மத் அரைசதம்

மிர்புர்: ஹசன் ஜாய், ஷாத்மன் அரைசதம் விளாச வங்கதேச அணி வலுவான முன்னிலை பெற்றது.வங்கதேசம், அயர்லாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் மிர்புரில் நடக்கிறது. வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 476 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 98/5 ரன் எடுத்திருந்தது.மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஸ்டீபன் தோஹேனி (46), ஜோர்டான் நீல் (49) ஓரளவு கைகொடுத்தனர். லார்கன் டக்கர் அரைசதம் கடந்தார். அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 265 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. டக்கர் (75) அவுட்டாகாமல் இருந்தார். வங்கதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட் சாய்த்தார்.பின் 2வது இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணிக்கு மகமதுல் ஹசன் ஜாய், ஷாத்மன் இஸ்லாம் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. இருவரும் அரைசதம் விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 119 ரன் சேர்த்த போது ஹசன் ஜாய் (60) அவுட்டானார். ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 156/1 ரன் எடுத்து, 367 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ஷாத்மன் (69), மோமினுல் ஹக் (19) அவுட்டாகாமல் இருந்தனர்.லேசான நிலநடுக்கம்அயர்லாந்து அணி 165/5 ரன் எடுத்திருந்த போது, மிர்புர் மைதானத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து போட்டி சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. ஐந்து நிமிடத்திற்கு பின் மீண்டும் போட்டி நடத்தப்பட்டது. இம்மைதானத்தில் இருந்து 50 கி.மீ., தொலைவில் பலத்த நிலநடுக்கம் (5.7 ரிக்டர்) ஏற்பட்டது. இதன் தாக்கம் மைதானத்திலும் பிரதிபலித்தது. அதிர்ஷ்டவசமாக இரு அணி வீரர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்