உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஒரு ரன்னில் கோவை வெற்றி: திருப்பூர் அணி பரிதாபம்

ஒரு ரன்னில் கோவை வெற்றி: திருப்பூர் அணி பரிதாபம்

சேலம்: கடைசி ஓவரில் அசத்திய கோவை அணி ஒரு ரன்னில் 'திரில்' வெற்றி பெற்றது. திருப்பூர் அணி பரிதாமாக தோல்வியடைந்தது.சேலத்தின் வாழப்பாடியில் நேற்று நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' கோவை, திருப்பூர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த கோவை அணிக்கு சுஜய் (27), பாலசுப்ரமணியம் சச்சின் (30) ஓரளவு கைகொடுத்தனர். நடராஜன், புவனேஸ்வரன் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய ஷாருக்கான், 29 பந்தில் அரைசதம் கடந்தார். நடராஜன் 'வேகத்தில்' ஷாருக்கான் (55) வெளியேறினார்.கோவை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 160 ரன் எடுத்தது. அதீக் உர் ரஹ்மான் (11) அவுட்டாகாமல் இருந்தார்.சவாலான இலக்கை விரட்டிய திருப்பூர் அணிக்கு ராதாகிருஷ்ணன் (0), அமித் சாத்விக் (12), கேப்டன் விஜய் சங்கர் (16), பாலசந்தர் அனிருத் (4) சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய துஷார் ரஹேஜா அரைசதம் விளாசினார். முகமது அலி (35) ஓரளவு கைகொடுத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்டன. முகமது பந்துவீசினார். துஷார் (81), புவனேஸ்வரன் (0), கணேஷ் (1) அவுட்டாக 8 ரன் மட்டுமே கிடைத்தது.திருப்பூர் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 159 ரன் எடுத்து தோல்வியடைந்தது. அஜித் ராம் (4) அவுட்டாகாமல் இருந்தார். கோவை சார்பில் ஷாருக்கான், முகமது தலா 2 விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகன் விருதை ஷாருக்கான் வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ