உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சாதிப்பரா இந்திய பெண்கள்: தென் ஆப்ரிக்காவுடன் முதல் மோதல்

சாதிப்பரா இந்திய பெண்கள்: தென் ஆப்ரிக்காவுடன் முதல் மோதல்

பெங்களூரு: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் துவக்க இந்திய வீராங்கனைகள் காத்திருக்கின்றனர்.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க பெண்கள் அணி, மூன்று ஒருநாள் (ஜூன் 16, 19, 23, இடம்: பெங்களூரு), ஒரு டெஸ்ட் (ஜூன் 28 - ஜூலை 1, இடம்: சென்னை), மூன்று 'டி-20' (ஜூலை 5, 7, 9, இடம்: சென்னை) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இன்று, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி நடக்கிறது.இந்த ஆண்டு துவக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள், 'டி-20' தொடரை இழந்த இந்திய அணி, வங்கதேச மண்ணில் 'டி-20' தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றியது. தற்போது சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சாதித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ரன் மழை பொழிய காத்திருக்கின்றனர். இளம் விக்கெட் கீப்பர் பேட்டர் உமா செத்ரியும் பேட்டிங்கில் கைகொடுக்கலாம். காயத்தில் இருந்து மீண்ட ஜெமிமா ரோட்ரிக்ஸ், பூஜா உடற்தகுதியை நிரூபித்தால் நல்லது. 'வேகத்தில்' ரேணுகா சிங் தாகூர், அருந்ததி ரெட்டி, 'சுழலில்' ஆஷா ஷோபனா, ஸ்ரேயங்கா பாட்டீல் விக்கெட் வேட்டை நடத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை