உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / மவுனம் கலைத்தார் காம்பிர்

மவுனம் கலைத்தார் காம்பிர்

துபாய்: 'டி-20' உலக கோப்பை தொடருடன் இந்திய அணி பயிற்சியாளர் டிராவிட் பதவிக்காலம் முடிகிறது. புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் காம்பிர் நியமிக்கப்படலாம்.கடந்த 2007ல் 'டி-20', 2011ல் 50 ஓவர் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர் காம்பிர். சமீபத்திய ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா பயிற்சியாளராக முத்திரை பதித்தார். அணி கோப்பை வெல்ல உதவினார். இவரை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க பி.சி.சி.ஐ., முயற்சிக்கிறது.இது குறித்து காம்பிர் கூறுகையில்,''இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்புகிறேன். 140 கோடி மக்களின் பிரதிநிதியாக செயல்படுவது பெரிய கவுரவம். உலக கோப்பை வெல்ல, இந்திய வீரர்கள் துணிச்சலாக விளையாட வேண்டும். ரசிகர்களும் பிரார்த்தித்தால், நிச்சயமாக கோப்பை கைப்பற்றலாம். 'டிரஸ்சிங் ரூமில்' வீரர்கள் மகிழ்ச்சியாக இருந்தால், வெற்றி வசப்படும். இந்த மந்திரத்தை தான் கோல்கட்டா அணிக்கு சொல்லி கொடுத்தேன். கடவுளின் கருணையும் கைகொடுக்க, எல்லாம் சாதகமாக அமைந்தது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை