மேலும் செய்திகள்
இலங்கை சிங்கம் நிசங்கா சதம்: ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி
18 hour(s) ago
ஆப்கானிஸ்தான் முதல் வெற்றி: எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது
18 hour(s) ago
வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் கிரீன் சதம் விளாசினார்.நியூசிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. வெலிங்டனில் முதல் டெஸ்ட் நடக்கிறது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சவுத்தீ 'பீல்டிங்' தேர்வு செய்தார்.ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் (31), உஸ்மான் கவாஜா (33) நல்ல துவக்கம் கொடுத்தனர். மார்னஸ் லபுசேன் (1), டிராவிஸ் ஹெட் (1) ஏமாற்றினர். மிட்சல் மார்ஷ் (40) ஓரளவு கைகொடுத்தார். அலெக்ஸ் கேரி (10), மிட்சல் ஸ்டார்க் (9), கேப்டன் கம்மின்ஸ் (16), நாதன் லியான் (5) நிலைக்கவில்லை. தனிநபராக அசத்திய கேமிரான் கிரீன் டெஸ்ட் அரங்கில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார்.முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 279 ரன் எடுத்திருந்தது. கிரீன் (103), ஜோஷ் ஹேசல்வுட் (0) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் மாட் ஹென்றி 4 விக்கெட் கைப்பற்றினார்.
18 hour(s) ago
18 hour(s) ago