| ADDED : ஜூன் 02, 2024 11:05 PM
நியூயார்க்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும். கடந்த ஆண்டுக்கான விருதுக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியானது. இதில் ஒருநாள் போட்டியின் சிறந்த வீரராக இந்தியாவின் விராத் கோலி தேர்வானார்.கடந்த ஆண்டு கோலி விளையாடிய 27 ஒருநாள் போட்டியில், 6 சதம், 8 அரைசதம் உட்பட 1377 ரன் (சராசரி 72.47, 'ஸ்டிரைக் ரேட்' 99.13) விளாசினார். இதில் சொந்த மண்ணில் நடந்த ஐ.சி.சி., உலக கோப்பையில் (50 ஓவர்) 765 ரன் குவித்த கோலி, தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். தவிர ஒருநாள் போட்டியில் அதிக சதம் (50) விளாசிய வீரர்கள் வரிசையில் சச்சினை (49 சதம்) முந்தினார்.இதற்கான விருதை கோலி பெற்றுக் கொண்டார். தவிர இவர், கடந்த ஆண்டின் சிறந்த ஐ.சி.சி., ஒருநாள் போட்டி அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதற்கான தொப்பியையும் பெற்றுக் கொண்டார்.