உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / கோப்பை வென்றது இந்தியா: பெண்கள் டி-20 தொடரில்...

கோப்பை வென்றது இந்தியா: பெண்கள் டி-20 தொடரில்...

சில்ஹெட்: ஐந்தாவது 'டி-20' போட்டியில் 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய பெண்கள் அணி 5-0 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.வங்கதேசம் சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டியில் இந்தியா வென்றது. சில்ஹெட்டில் ஐந்தாவது போட்டி நடந்தது.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (33), ஹேமலதா (37), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (30) கைகொடுத்தனர். இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 156 ரன் எடுத்தது. ரிச்சா கோஷ் (28), தீப்தி சர்மா (5) அவுட்டாகாமல் இருந்தனர்.சவாலான இலக்கை விரட்டிய வங்கதேச அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 135 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ரிது மோனி (37), ஷோரிபா (28*) ஆறுதல் தந்தனர். இந்தியா சார்பில் ராதா யாதவ் 3, ஆஷா சோபனா 2 விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகி, தொடர் நாயகி (10 விக்கெட்) விருதுகளை இந்தியாவின் ராதா யாதவ் கைப்பற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை