நியூயார்க்: 'டி-20' உலக கோப்பையில் பங்கேற்பதற்காக கேப்டன் ரோகித், பயிற்சியாளர் டிராவிட் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணியினர் நியூயார்க் சென்றனர்.அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 9வது சீசன் ஜூன் 2ல் துவங்குகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, தனது முதல் போட்டியில் அயர்லாந்தை (ஜூன் 5, இடம்: நியூயார்க்) சந்திக்கிறது.இத்தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணி, வங்கதேசத்துடன் ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் (ஜூன் 1, இடம்: நியூயார்க்) விளையாடுகிறது. இந்திய அணியினர் இரு பிரிவுகளாக அமெரிக்கா செல்வர் என தெரிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக கேப்டன் ரோகித், பயிற்சியாளர் டிராவிட் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணியினர் நியூயார்க் சென்றனர். இதில் பும்ரா, முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பன்ட், ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் படேல், மாற்று வீரர்களான சுப்மன் கில், கலீல் அகமது இடம் பெற்றிருந்தனர்.மற்ற இந்திய வீரர்களான கோலி, துணை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சகால், அவேஷ் கான் (மாற்று வீரர்) உள்ளிட்டோர் விரைவில் நியூயார்க் செல்ல உள்ளனர்.