உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்திய பெண்கள் ஏமாற்றம் * தென் ஆப்ரிக்க அணி வெற்றி

இந்திய பெண்கள் ஏமாற்றம் * தென் ஆப்ரிக்க அணி வெற்றி

சென்னை: முதல் 'டி-20' போட்டியில் இந்திய பெண்கள் அணி 12 ரன் வித்தியாசத்தில், தென் ஆப்ரிக்காவிடம் தோல்வியடைந்தது.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க பெண்கள் அணி, மூன்று போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. போட்டிகள் அனைத்தும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கின்றன. முதல் போட்டி நேற்று நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பீல்டிங் தேர்வு செய்தார்.லாரா அபாரம்தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் லாரா, பிரிட்ஸ் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ரேணுகா வீசிய போட்டியின் 3வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி உட்பட 16 ரன் விளாசினார் லாரா. ராதா சுழலில், லாரா (33 ரன், 22 பந்து) போல்டானார். இதன் பின் இந்திய வீராங்கனைகள் பீல்டிங் மந்தமாக அமைய, வாய்ப்பை பயன்படுத்திய தென் ஆப்ரிக்க அணியினர் ரன் குவித்தனர்.பிரிட்ஸ், காப் என இருவரும் அரைசதம் விளாசினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்த போது, மீண்டும் பந்தை சுழற்றிய ராதா, காப்பை (57) அவுட்டாக்கி அனுப்பி வைத்தார். பிரிட்ஸ் 81 ரன் எடுத்தார். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 189 ரன் குவித்தது. ஜெமிமா ஆறுதல்அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஷபாலி வர்மா (18), ஸ்மிருதி மந்தனா (46) நல்லது ஜோடி துவக்கம் கொடுத்தது. ஹேமலதா (14) நிலைக்கவில்லை. கடைசி நேரத்தில் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா இணைந்து போராடினர். ஜெமிமா அரைசதம் கடந்தார். கடைசி ஓவரில் இந்தியா வெற்றிக்கு 21 ரன் தேவைப்பட்டன. ஹர்மன்பிரீத் கவுர் (35) அவுட்டாக, 8 ரன் மட்டும் கிடைத்தன. இந்திய அணி 20 ஓவரில் 177/4 ரன் மட்டும் எடுத்து, தோல்வியடைந்தது. ஜெமிமா (53) அவுட்டாகாமல் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ