உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / மந்தனா, ஹர்மன்பிரீத் சதம்... இந்தியா திரில் வெற்றி

மந்தனா, ஹர்மன்பிரீத் சதம்... இந்தியா திரில் வெற்றி

பெங்களூரு: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி கடைசி பந்தில் 'திரில்' வெற்றி பெற்றது. 4 ரன்னில் தென் ஆப்ரிக்காவை வென்றது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க பெண்கள் அணி, மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா 1-0 என முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி நேற்று பெங்களூருவில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது.மந்தனா சதம்இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷபாலி (20) ஜோடி துவக்கம் கொடுத்தது. ஹேமலதா 24 ரன் எடுத்தார். மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இணைந்தனர். மந்தனா, ஒருநாள் அரங்கில் 7வது சதம் (84வது இன்னிங்ஸ்) விளாசினார். 3வது விக்கெட்டுக்கு 171 ரன் சேர்த்த போது, மந்தனா (136 ரன், 120 பந்து) அவுட்டானார். மறுபக்கம் ஹர்மன்பிரீத் கவுர், 6வது சதம் அடித்தார். இந்திய அணி 50 ஓவரில் 325/3 ரன் குவித்தது. ஹர்மன்பிரீத் (103), ரிச்சா (25) அவுட்டாகாமல் இருந்தனர். மிரட்டிய இருவர்தென் ஆப்ரிக்க அணிக்கு பிரிட்ஸ் (5), கேப்டன் லாரா ஜோடி துவக்கம் கொடுத்தது. அன்னெகே (18), சுனே (12) கைவிட்ட போதும், லாரா, மரிஜான்னே இணைந்து மிரட்டினர். மரிஜான்னே 85 வது பந்தில் சதம் எட்டினார். 4வது விக்கெட்டுக்கு 184 ரன் சேர்த்த போது மரிஜான்னே (114) அவுட்டானார். லாரா தன் பங்கிற்கு சதம் அடிக்க, இலக்கை வேகமாக நெருங்கியது தென் ஆப்ரிக்கா. பூஜா வீசிய கடைசி ஓவரில் 11 ரன் தேவைப்பட்டன. முதல் இரு பந்தில் 5 (1, 4) ரன் எடுக்க, 3, 4வது பந்தில் நாடின் (28), ஷாங்கசே (0) அவுட்டாகினர். 5வது பந்தில் 1 ரன் (பை) வர, 6வது பந்தில் 5 ரன் தேவைப்பட்டன. பூஜா துல்லியமாக வீச, ரன் எதுவும் எடுக்கப்படவில்லை. தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 321/6 ரன் எடுத்து தோற்றது. லாரா (135) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா 2-0 என தொடரை வென்றது.7இந்திய பெண்கள் கிரிக்கெட், ஒருநாள் அரங்கில் அதிக சதம் அடித்த வீராங்கனை பட்டியலில் முதலிடத்தை, மிதாலி ராஜுடன் பகிர்ந்து கொண்டார் ஸ்மிருதி மந்தனா. இருவரும் தலா 7 சதம் அடித்தனர். அடுத்த இடத்தில் ஹர்மன்பிரீத் கவுர் (6) உள்ளார்.* தவிர குறைந்த இன்னிங்சில் (84ல்) அதிக சதம் (7) விளாசிய வீராங்கனை ஆனார் மந்தனா. மிதாலி ராஜ் 211 இன்னிங்சில் 7 சதம் அடித்தார்.* ஒருநாள் அரங்கில் அடுத்தடுத்த போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய வீராங்கனை ஆனார் மந்தனா.87நேற்று 87 வது பந்தில் சதம் அடித்த ஹர்மன்பிரீத் கவுர், ஒருநாள் அரங்கில் குறைந்த பந்தில் சதம் விளாசிய இந்திய வீராங்கனை ஆனார். இதற்கு முன் இவர் 90 பந்தில் (2017, ஆஸி.,) சதம் அடித்து இருந்தார்.136சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த, இந்திய வீராங்கனை ஆனார் மந்தனா (136 ரன்). இதற்கு முன் முதல் போட்டியில் இவர் 117 ரன் எடுத்திருந்தார். மிதாலி ராஜ் (109) அடுத்து உள்ளார்.325ஒருநாள் அரங்கில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது இந்திய பெண்கள் அணி. நேற்று 325/3 ரன் குவித்தது. இதற்கு முன் வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக 298/2 ரன் (2004) எடுத்திருந்தது.646ஒருநாள் அரங்கில் இந்தியா (325), தென் ஆப்ரிக்கா (321) மோதலில் அதிக ரன் (646) எடுக்கப்பட்ட ஆட்டமாக, பெங்களூரு போட்டி அமைந்தது. முன்னதாக 2022ல் 549 ரன் எடுத்ததே அதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ