உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / வயசுக்கு டிஸ்கவுன்ட் கிடைக்குமா... * தல தோன கலகல

வயசுக்கு டிஸ்கவுன்ட் கிடைக்குமா... * தல தோன கலகல

புதுடில்லி: ''தொழில்ரீதியான விளையாட்டில் வயதுக்கு சலுகை கிடைக்காது,'' என தோனி தெரிவித்தார்.இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. 42 வயதிலும் உடல் அளவில் 'பிட்' ஆக உள்ளார். ஐ.பி.எல்., தொடரில் காயத்தை பொருட்படுத்தாது சென்னை அணிக்காக 14 லீக் போட்டிகளிலும் பங்கேற்றார். 161 ரன் குவித்தார். இவரது சிக்சர் அடிக்கும் திறனை பார்த்து ரசிகர்கள் வியந்தனர். இன்னும் இரண்டு ஐ.பி.எல்., சீசனில் பங்கேற்கலாம் என பாராட்டினர். இது குறித்து 'தல' தோனி கூறியது:முழங்கால் ஆப்பரேஷன் காரணமாக ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாட முடியவில்லை. இந்தச் சூழலில் தான் இம்முறை ஐ.பி.எல்., தொடரில் களமிறங்கினேன். இளம் வீரர்களுடன் போட்டியிட வேண்டும் என்றால், உடல் அளவில் நான் 'பிட்' ஆக இருப்பது அவசியம். தொழில்ரீதியான விளையாட்டில் பங்கேற்பது எளிதான காரியம் அல்ல. இங்கு வயதுக்கு எல்லாம் தள்ளுபடி அல்லது சலுகை அளிக்க மாட்டார்கள். உணவு கட்டுப்பாடு, பயிற்சி விஷயத்தில் கவனம் செலுத்தி, அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடினேன். கவனச் சிதறலை தவிர்க்க, சமூகவலைதளங்களில் இருந்து விலகி இருந்தேன். மாறாத நாய் பாசம்சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதும், சுறுசுறுப்பாக இருக்க முயற்சித்தேன். விவசாயம், பைக் ஓட்டுவது, பழைய கார்களை ரசிப்பது போன்றவை மனஅழுத்தத்தில் இருந்து விடுபட உதவியது. நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்க்கிறேன். இவை எப்போதும் அன்பாக இருக்கும். நான் போட்டியில் தோற்று வந்தாலும், என் நாய் அதே அன்புடன் பழகும். யாரிடமும் மரியாதையை எதிர்பார்க்க கூடாது. அது, தானாக கிடைக்க வேண்டும். சென்னை அணியுடனான உறவு உணர்வுபூர்வமானது. இரண்டு மாதம் சென்னை வந்து விளையாடி விட்டு மீண்டும் ராஞ்சி செல்வது போல கிடையாது. சென்னை உடனான பந்தம் நீடிக்கும்.இவ்வாறு தோனி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ