| ADDED : ஜூலை 20, 2024 11:27 PM
திருநெல்வேலி: பவுலிங்கில் ஏமாற்றிய நெல்லை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அருண் கார்த்திக் அரைசதம் வீணானது.தமிழகத்தில், டி.என்.பி.எல்., 8வது சீசன் நடக்கிறது. திருநெல்வேலியில் நடந்த லீக் போட்டியில் நெல்லை, திருச்சி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருச்சி அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.நெல்லை அணிக்கு நிதிஷ் ராஜகோபால் (15), சோனு யாதவ் (17) ஆறுதல் தந்தனர். ரித்திக் ஈஸ்வரன் (29) ஓரளவு கைகொடுத்தார். அபாரமாக ஆடிய கேப்டன் அருண் கார்த்திக், 51 பந்தில், 84 ரன் (2 சிக்சர், 10 பவுண்டரி) விளாசினார். நெல்லை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்தது. மோகன் பிரசாத் (5), லக்சயா ஜெய்ன் (2) அவுட்டாகாமல் இருந்தனர். திருச்சி அணி சார்பில் சரவண குமார் 4 விக்கெட் கைப்பற்றினார்.சவாலான இலக்கை விரட்டிய திருச்சி அணிக்கு ராஜ்குமார் (22), வாசீம் அகமது (27) நல்ல துவக்கம் கொடுத்தனர். அர்ஜுன் மூர்த்தி (1) ஏமாற்றினார். ஸ்யாம் சுந்தர் (31), ஜாபர் ஜமால் (39), சஞ்சய் யாதவ் (23) நம்பிக்கை அளித்தனர். மோகித் ஹரிஹரன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ராஜ்குமார் வெற்றியை உறுதி செய்தார்.திருச்சி அணி 19.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ராஜ்குமார் (31), அந்தோணி தாஸ் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.