உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்தியாவிடம் வீழ்ந்தது நியூசி., * ஜூனியர் உலக கோப்பை தொடரில்...

இந்தியாவிடம் வீழ்ந்தது நியூசி., * ஜூனியர் உலக கோப்பை தொடரில்...

புளோயம்போன்டைன்: ஜூனியர் உலக கோப்பை தொடரின் 'சூப்பர்-6' போட்டியில் இந்திய அணி 214 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. தென் ஆப்ரிக்காவில் ஜூனியர் உலக கோப்பை தொடர் (19 வயது) நடக்கிறது. இதன் 'சூப்பர்-6' போட்டியில் ஐந்து முறை சாம்பியன் ஆன இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது.

முஷீர் கலக்கல்

இந்திய அணிக்கு ஆதர்ஷ், அர்ஷின் (9) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. ஆதர்ஷ் (52) அரைசதம் விளாசினார். கேப்டன் சஹாரன் 34 ரன் எடுத்தார். ஆரவெல்லி (17), பிரியான்ஷு (10) அணியை கைவிட்ட போதும், முஷீர் கான் இத்தொடரில் இரண்டாவது சதம் அடித்தார்.சச்சின் (15) நிலைக்கவில்லை. முஷீர் கான் 126 பந்தில் 131 ரன் எடுத்து அவுட்டானார். இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 298 ரன் குவித்தது.பின் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு நெல்சன் (10), கேப்டன் ஜாக்சன் (19), கம்மிங் (16), தாம்ப்சன் (12) தவிர வேறு யாரும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. 28.1 ஓவரில் 81 ரன்னுக்கு சுருண்டது.இந்தியா 214 ரன்னில் இமாலய வெற்றி பெற்றது. சவுமி பாண்டே 4 விக்கெட் சாய்த்தார். புள்ளிப்பட்டியலில் இந்தியா, 6 புள்ளியுடன் (ரன் ரேட் 3.327) அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை