உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / வெளியேறியது பாகிஸ்தான்: மழையால் போட்டி ரத்து

வெளியேறியது பாகிஸ்தான்: மழையால் போட்டி ரத்து

லாடர்ஹில்: அயர்லாந்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்தானதால் அமெரிக்க அணி 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணி பரிதாபமாக வெளியேறியது.அமெரிக்காவின் லாடர்ஹில் நகரில் நேற்று நடக்க இருந்த 'டி-20' உலக கோப்பை 'ஏ' பிரிவு லீக் போட்டியில் அமெரிக்கா, அயர்லாந்து அணிகள் மோத இருந்தன. ஆனால் மழை, ஆடுகள ஈரப்பதம் காரணமாக போட்டி ரத்தானது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன. 'ஏ' பிரிவில் 3 போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா, ஏற்கனவே 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது. அமெரிக்க அணி 4 போட்டியில், 2 வெற்றி, ஒரு தோல்வி உட்பட 5 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. இதன்மூலம் 'டி-20' உலக கோப்பையில் அறிமுகமான முதல் தொடரில் 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியானது. பாகிஸ்தான் அணி, தனது கடைசி லீக் போட்டியில் (ஜூன் 16) அயர்லாந்தை வீழ்த்தினால் கூட 4 புள்ளி மட்டும் பெறும் என்பதால் 'சூப்பர்-8' சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி