| ADDED : பிப் 04, 2024 08:09 PM
மவுன்ட் மவுன்கனுய்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்தின் வில்லியம்சன், ரச்சின் சதம் விளாசினர்.நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மவுன்ட் மவுன்கனுயில் முதல் டெஸ்ட் நடக்கிறது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா 'பீல்டிங்' தேர்வு செய்தது.நியூசிலாந்து அணிக்கு டாம் லதாம் (20), கான்வே (1) ஏமாற்றினர். பின் இணைந்த கேன் வில்லியம்சன், ரச்சின் ரவிந்திரா ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. தென் ஆப்ரிக்க பந்துவீச்சை எளிதாக சமாளித்த இருவரும் சதம் கடந்தனர். ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 258 ரன் எடுத்திருந்தது. வில்லியம்சன் (112 ரன், 15 பவுண்டரி), ரச்சின் (118 ரன், 13 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் பேட்டர்சன், மோரேகி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.