உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ராஜ்கோட் டெஸ்ட்: வந்தார் அஷ்வின்

ராஜ்கோட் டெஸ்ட்: வந்தார் அஷ்வின்

ராஜ்கோட்: இந்தியாவின் அஷ்வின் ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தில் பங்கேற்றார்.இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடந்தது. இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் அசத்திய இந்தியாவின் அஷ்வின், டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். இவரது தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், போட்டியில் இருந்து பாதியில் விலகினார். அவசரமாக சென்னை திரும்பினார். இவரது தாய் சித்ரா, சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நேற்றைய நான்காம் நாள் ஆட்ட தேநீர் இடைவேளையின் போது மீண்டும் போட்டியில் களமிறங்கினார் அஷ்வின். இவரது அர்ப்பணிப்பு உணர்வை கண்டு ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில்,''சென்னை செல்லவும், பின் அங்கிருந்து ராஜ்கோட் திரும்பவும் அஷ்வினுக்கு தனி விமானம் ஏற்பாடு செய்து கொடுத்த பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷாவின் செயல் பாராட்டுக்குரியது,'' என்றார்.

250 விக்கெட்

இங்கிலாந்தின் டாம் ஹார்ட்லியை போல்டாக்கிய இந்தியாவின் அஷ்வின், டெஸ்ட் அரங்கில் இடது கை பேட்டர்களை 250 முறை அவுட்டாக்கிய முதல் பவுலர் என்ற சாதனை படைத்தார். அடுத்த இரு இடங்களில் இங்கிலாந்தின் ஆண்டர்சன் (217 முறை), ஸ்டூவர்ட் பிராட் (193) உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை