உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ரஞ்சி: தமிழகம் ரன் குவிப்பு

ரஞ்சி: தமிழகம் ரன் குவிப்பு

கோவை: சவுராஷ்டிராவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதியில் தமிழகத்தின் சாய் கிஷோர், பாபா இந்திரஜித், பூபதி குமார் அரைசதம் விளாசினர்.இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் ரஞ்சி கோப்பை 89வது சீசன் நடக்கிறது. கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடக்கும் காலிறுதியில் தமிழகம், சவுராஷ்டிரா அணிகள் விளையாடுகின்றன. சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 183 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 23/1 ரன் எடுத்திருந்தது. ஜெகதீசன் (12), கிஷோர் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜெகதீசன் (37), பிரதோஷ் ரஞ்சன் பால் (13) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய கேப்டன் சாய் கிஷோர் (60), பாபா இந்திரஜித் (80), பூபதி குமார் (65) அரைசதம் கடந்தனர். ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 300 ரன் எடுத்திருந்தது. விஜய் சங்கர் (14), முகமது அலி (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

முஷீர் இரட்டை சதம்

* மும்பையில் நடக்கும் காலிறுதியில் முஷீர் கான் (203) இரட்டை சதம் விளாச மும்பை அணி முதல் இன்னிங்சில் 384 ரன் எடுத்தது. ஆட்டநேர முடிவில் பரோடா அணி முதல் இன்னிங்சில் 127/2 ரன் எடுத்திருந்தது.* நாக்பூரில் நடக்கும் காலிறுதியில் அதர்வா (109), யாஷ் ரத்தோடு (93), கருண் நாயர் (90) கைகொடுக்க விதர்பா அணி முதல் இன்னிங்சில் 460 ரன் குவித்தது. ஆட்டநேர முடிவில் கர்நாடகா அணி முதல் இன்னிங்சில் 98/2 ரன் எடுத்திருந்தது.* இந்துாரில் நடக்கும் காலிறுதியின் முதல் இன்னிங்சில் மத்திய பிரதேசம் 234, ஆந்திரா 172 ரன் எடுத்தன. ஆட்டநேர முடிவில் மத்திய பிரதேச அணி 2வது இன்னிங்சில் 21/0 ரன் எடுத்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி